Breaking News

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் நிர்மாணம் இன்றையதினம் ஆரம்பம்


கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் இன்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த நிர்மாணப் பணிகளுக்காக இலங்கை துறைமுக அதிகார சபை, 510 மில்லியன் அமெரிக்க டொலரை முதலீடு செய்யவுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை இந்தியாவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

எனினும், தொழிற்சங்கங்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அந்த திட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய அபிவிருத்தியை இலங்கை துறைமுக அதிகார சபை பொறுப்பேற்றுக்கொண்டது.

இந்த முனையத்தின் அபிவிருத்தி பணிகளை, 2024ம் ஆண்டு நடுப்பகுதியில் நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது. (Vavuniyan) 

No comments