முன்னாள் சுகாதார அமைச்சரால் பாடசாலை மாணவர்களுக்கு ஈருருளிகள் வழங்கிவைப்பு
முன்னாள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சரும், இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் பதில் பொதுச்செயலாளருமாகிய மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கத்தினால் வறுமைக்கோட்டுக்குட்பட்ட பாடசாலை செல்லும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஈருருளிகள் வழங்கி வைக்கப்பட்டன.
வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கட்சியின் அமைப்பாளர் ந.கருணாநிதி, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர் சந்திரசேகரம், வவுனியா வடக்கு பிரதேச புதிய உறுப்பினராக முன்மொழியப்பட்ட ரஞ்சினி ஜெயகரன் ஆகியோர் கலந்து கொண்டனர் (Vavuniyan)
No comments