எதிர்வரும் விவசாய போகத்திற்கு இராணுவத்தை பயன்படுத்த ஜனாதிபதி தீர்மானம்
எதிர்வரும் விவசாய போகத்திற்கு இராணுவத்தை பயன்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
மொனராகலை – சியம்பலாண்டுவ பகுதியில் விவசாயிகளை நேற்று (07) சந்தித்து உரையாடிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு இயற்கை உரம் தொடர்பிலான தெளிவூட்டல்கள் சரியான வகையில் சென்றடையவில்லை எனவும் அவர் கூறுகின்றார்.
தனது நோக்கமானது நஞ்சற்ற உணவை உற்பத்தி செய்வதே எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
சில விவசாயங்களுக்கு செயற்கை உரம் பயன்படுத்த வேண்டியுள்ளதாக கூறிய அவர், அவ்வாறான விவசாய நடவடிக்கைகளுக்கு அவற்றை பயன்படுத்த முடியும் எனவும் குறிப்பிட்டார்.
தன்மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவிக்கின்றார். (Vavuniyan)
No comments