வவுனியாவில் பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிராக ஆர்பாட்டம்!!
வவுனியாவில் அத்தியவசிய பொருட்களின் விலை அதிகரிப்பிற்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
புதிய ஜனநாயக மாக்கசிச லெனினிச கட்சியினரால் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உழைக்கும் மக்களை பட்டிணி போடாதே, கட்டுப்பாட்டு விலையை கொண்டுவா,ஊழல் பணத்தை வெளியே கொண்டு வா, உழைப்போரை வதைக்காதே,தேர்தல் வாக்குறுதி என்னாச்சு போன்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.
ஆர்பாட்டத்தில் புதிய ஜனநாயக மாக்கசிச லெனினிச கட்சியின் செயலாளர் சி.கா.செந்தில்வேல், கட்சியின் முக்கியஸ்தர்களான செல்வம் கதிர்காமநாதன், நி.பிரதீபன், வவுனியா தமிழரசுக்கட்சியின் அமைப்பாளர் ந.கருணாநிதி, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் வவுனியா கிளையின் பா.நேசராஜா, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினர் உட்பட பொது அமைப்புக்கள் ஆதரவினை வழங்கியதுடன், பெருமளவான பொது மக்களும் கலந்துகொண்டனர்.
No comments