Breaking News

இலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்தி ஒரு வருட பூர்தியை முன்னிட்டு வவுனியாவில் கௌரவிப்பு நிகழ்வு


இலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்தி ஒரு வருட பூர்தியை முன்னிட்டு வவுனியாவில் கௌரவிப்பு நிகழ்வு ஒன்று இன்றையதினம் இடம்பெற்றது.


வவுனியா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் நிலக்சன் தலைமையில் வவுனியா மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதன்போது கொவிட் தடுப்பூசி தொடர்பான விளக்கமளிக்கப்பட்துடன், இச்செயற்பாட்டை வெற்றிகரமாக செலுத்துவதற்கு காரணமாக இருந்த வைத்தியர்கள், சுகாதார பரிசோதகர்கள், தாதியர்கள் மற்றும் இந்நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதேச செயலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள், விமானப் படையினர் மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் இதன்போது சான்றிதழ்களும் நினைவு சின்னங்களும் வழங்கப்ப்டிருந்தது.

இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், கு.திலீபன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.ஏ.சரத்சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார், பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியர் எம்.மகேந்திரன், வைத்திய அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளரகள்;, பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் கொவிட் தடுப்பூசி செலுத்தி ஒரு வருட பூர்தியை முன்ணிட்டு தேசிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(Vavuniyan)

















No comments