Breaking News

வவுனியா வைத்தியசாலைக்கு சஜித் பிரேமதாசவினால் இரத்த சுத்திகரிப்பு தொகுதி வழங்கி வைப்பு


வவுனியா வைத்தியசாலைக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவினால் இரத்த சுத்திகரிப்பு தொகுதி கையளிக்கப்பட்டது. 

எதிரக்கட்சித்தலைவரின் வடக்கிற்கான விஜயத்தின் முதற்கட்டமாக இன்று வவுனியாவிற்கு வருகை தந்த அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு செயற்திட்டத்தின் ஊடாக வவுனியா வைத்தியசாலைக்கு 24 இலட்சம் பெறுமதியான இரத்த சுத்திகரிப்பு தொகுதியை கையளித்திருந்தார். 

ஐக்கிய மக்கள் சக்தியினால் அரச வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ உபகரணத்தொகுதிகளில் 35 ஆவது வைத்தியசாலையாக வவுனியா வைத்தியசாலைக்கு குறித்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. 
வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி க. ராகுலன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுர்தீன், புத்திக பத்திரன, ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் உமா சந்திரபிரகாஸ், வன்னி மாவட்ட அமைப்பாளர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் உட்பட வைத்தியசாலை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

இதன்போது எதிர்க்கட்சி தலைவருக்கு வைத்தியசாலையினால் நினைவு சின்னமும் வழங்கப்பட்டது.












No comments