வவுனியாவில் கைதியொருவர் தப்பியோட்டம்
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட கைதி ஒருவர் தப்பியோடிய நிலையில்இ துரிதமாக செயற்பட்ட பொலிஸார் குறித்த நபரை மீளவும் நேற்று கைது செய்துள்ளனர்.
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவரை சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றிருந்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
தப்பியோடியவர் வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த நபரை தேடும் பணியில் சிறைச்சாலை உத்தியோத்தர்களும்இ பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் சிசிரிவி கமராவின் உதவியுடன் தேடுதலை மேற்கொண்டு குறித்த நபரை மீளவும் கைது செய்துள்ளனர்.(Vavuniyan)
No comments