Breaking News

இன்றையதினம் மின்வெட்டு – அறிவிப்பு வெளியானது


நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றையதினம் முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சுமார் ஒரு மணிநேர மின் வெட்டை அமுல்படுத்த வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை கூறுகின்றது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக செயலிழக்கச் செய்யப்பட்டுள்ள களனிதிஸ்ஸ மின்உற்பத்தி நிலையத்தின் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வரும் வகையில், இந்த மின் வெட்டை அமுல்படுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுவதாகவும் சபை குறிப்பிடுகின்றது. 


No comments