வவுனியாவை சேர்ந்த இளைஞன் கஞ்சாவுடன் கைது
வவுனியாவை சேர்ந்த இளைஞனை நேற்றைய தினம் திருகோணமலையில் கைது செய்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
உப்புவெளி போதைப் பொருள் குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சிறிய ரக லொறியொன்றில் பொருட்களுடன் மூன்று கிலோ 100 கிராம் கஞ்சா பொதி மீட்கப்பட்டதுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா மருதம் குளம், பகுதியைச் சேர்ந்தவர் 38 வயதுடைய ஒருவரையே கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை நேற்றைய தினம் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய போது இம்மாதம் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.(Vavuniyan)
No comments