ஒரே நாளில் சுமார் அரை மில்லியன் பேருக்கு கோவிட் தொற்று - பிரான்சில் உச்சம் தொட்டுள்ள கோவிட்
பிரான்சில் நேற்று ஒரே நாளில் 464,769 பேர் புதிதாக கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள்.
பிரான்சில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஒரே நாளில் சுமார் அரை மில்லியன் பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
கோவிட் தொற்று பரவலைத் தவிர்ப்பதற்காக, பிரான்ஸ் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஆறு வயதே உடைய சிறுபிள்ளைகளுக்குக் கூட முகக்கவசம் கட்டாயம், தேநீர் கடைகளிலும் மதுபான விடுதிகளிலும் நின்றவண்ணம் தேநீர், மது அருந்தத் தடை என்பது போன்ற பல கடுமையான கட்டுப்பாடுகளை பிரான்ஸ் விதித்துள்ளது.
குறிப்பாக தடுப்பூசி பெறாதவர்கள் பொது வாழ்வின் அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத வகையில், தடுப்பூசி கடவுச்சீட்டு திட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலைமையிலும், கூட பிரான்சில் கோவிட் தொற்று உச்சம் தொட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments