Breaking News

வவுனியா பொது வைத்தியசாலைக்கு வட மாகாண பிரதம செயலாளர் விஜயம்


தைப்பொங்கல் தினமான இன்று வவுனியா பொது வைத்தியசாலைக்கு வட மாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன விஜயம் மேற்கொண்டிருந்தார்.

வவுனியா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் மற்றும் ஆளுனரின் பரிந்துரைக்கமைய பிரதம செயலாளரினால் வைத்தியசாலையின் கட்டிட பராமரிப்புக்கு ஒதுக்கப்பட்ட 6 மில்லின் ரூபா வேலைத்திட்டங்களை இதன் போது பார்வையிட்டிருந்தார்.

இதேவேளை குறுகிய காலத்தில் வவுனியா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி பணிகள் தொடர்பில் வவுனியா பொது வைத்தியசாலையின் நிர்வாகத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்திருந்த பிரதம செயலாளர் மேலும் வைத்தியசாலையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் ஆலோசனைகளை மேற்கொண்டிருந்தார்.

இதேவேளை வவுனியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் தாதிய பரிபாலகர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது வைத்தியசாலையின் விபத்துப் பிரிவின் முக்கியத்துவம் மற்றும் அதன் கட்டிட நிர்மாணம் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட நிலையில் குறித்த பகுதியின் மேம்படுத்தல் சேவைக்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதம செயலாளர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை வவுனியா வைத்தியசாலையின் துரித அபிவிருத்தி மேம்பாடுகள் வட மாகாண வைத்தியசாலைகளுடன் ஒப்பிடுகையில் சிறப்பாக உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.(Vavuniyan) 

No comments