Breaking News

ஒரு மணித்தியாலயத்துக்கு மாத்திரமே, டீசல் கையிருப்பு! முழுமையாக இருளில் மூழ்குமா இலங்கை?


இலங்கை மின்சார சபையின் டீசல் மற்றும் உலை எண்ணெய் ஆகியவற்றின் கையிருப்பு, இன்று மாலை 5மணி வரைக்குமே இருப்பதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க செயலாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.

நாளையதினம் முழு நாடும் இருளில் மூழ்கும் என்று மின்சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தமை தொடர்பாகவே அவர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்

இந்தநிலையில் நாளைய தினத்தில் மின்சார உற்பத்திக்காக 2000 மெற்றின்தொன் டீசல் மற்றும் உலை எண்ணெய் என்பன தேவைப்படும் என்று ஆனந்த பாலித குறிப்பிட்டுகிறார். ஏற்கனவே இவ்விடயங்களை கூறியபோதும், அமைச்சர் கம்மன்பில, அதனை நிராகரித்தாக அவர் மேலும் தெரிவித்தார்.

எனினும் தற்போது அவரே இந்த தகவலை வெளியிட்டுள்ளார் என்று ஆனந்த பாலித தெரிவிக்கின்றார்.

இதேவேளை இந்நிலைமையை சமாளித்து இன்று மாலையில் மின்சாரம் தடைப்படாமல் விநியோகிக்கப்படும் என்றும் மின்சாரசபையின் மேலதிக பொது முகாமையாளர் அன்றூ நவமணி தெரிவித்திருந்தார்.(Vavuniyan)


No comments