Breaking News

வவுனியா பரசங்குளத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு


வுனியா பரசங்குளம் காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் இன்று மீட்கப்பட்டது.


இராணுவ புலனாய்வாளர்களிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், புளியங்குளம் பொலிஸாருடன் இணைந்து பரசங்குளம் காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே குறித்த குண்டுகள் மீட்கப்பட்டன.

இதன்போது ஆர்பிஜி ரக குண்டு 01, 60 மில்லிமீற்றர் மோட்டார் குண்டுகள் 03ம் மீட்கப்பட்டது.

மீட்கப்பட்ட குண்டுகளை செயலிழக்கச்செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணையினை புளியங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(Vavuniyan) 

No comments