அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிகரட்டுக்கான புதிய விலை சூத்திரம்
விலைச் சூத்திரமொன்றை அறிமுகம் செய்து அதன் ஊடாக சிகரட்டின் விலை அதிகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வார இறுதி பத்திரிகையொன்று இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
சிகரட்டுக்கான வரி குறித்த புதிய விலை சூத்திரம் அமைச்சரவையின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இவ் யோசனைத் திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக புகையிலை மற்றும் அல்ஹகோல் உற்பத்தி குறித்த தேசிய அதிகாரசபையின் தலைவர் டொக்டர் சமாதி ராஜபக்ச தெரிவிக்கின்றார்.
கடந்த டிசம்பர் மாதம் இது குறித்த யோசனை அமைச்ரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் இந்த விலை சூத்திரம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
தற்போதைய பண வீக்கத்தின் அடிப்படையில் சிகரட் விலைகள் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. சிகரட்டுக்கான ஒட்டுமொத்த வரியையும் நுகர்வோர் சுமக்கும் வகையில் விலைப்பொறிமுறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளது.(Vavuniyan)
No comments