Breaking News

வவுனியாவில் காணமல் போன உயர்தர வகுப்பு மாணவி


வவுனியாவில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக  பெற்றோரால் வவுனியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா - மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் 18 வயதுடைய உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் தனியார் வகுப்புக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய நிலையில், கடந்த வியாழக்கிழமை காணாமல் போனதையடுத்து குறித்த மாணவியின் பெற்றோரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ் முறைப்பாட்டையடுத்து பொலிஸாரினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த மாணவி தொடர்பில் தகவல் தெரிந்தோர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அல்லது 0774935652, 0772432257, 0772608819 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறியத்தருமாறும் பெற்றோர் கோரியுள்ளனர்.

No comments