Breaking News

அலுவலக நேரத்தில் மாற்றம்? சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை


எரிபொருள் தட்டுப்பாடு மற்றும்  அதனால் ஏற்பபட்ட மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான யோசனை ஒன்றை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது.

இதன்படி முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்தை மீண்டும் அறிமுகம் செய்வது, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அலுவலக நேரத்தில் திருத்தம், சூம் தொழில்நுட்பம் மூலம் அரச நிறுவனங்களில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் போன்றவை உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில சமர்பித்த யோசனை தொடர்பில் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட போதிலும் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.(Vavuniyan) 

No comments