திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாரா மஹிந்த?
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் உடல்நிலை குறித்து வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகவீனம் காரணமாக நேற்று கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என “lankacnews” செய்தி வெளியிட்டிருந்தது.
முதுகு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று மாலை வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதாகவும், பிரதமர் நலமுடன் இருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.(Vavuniyan)
No comments