Breaking News

வவுனியா மகளீர் அபிவிருத்தி நிலைய மாணவர்களின் கண்காட்சி


வவுனியா மகளீர் அபிவிருத்தி நிலைய மாணவர்களின் கண்காட்சி நிகழ்வு இன்று உள்வட்ட வீதியில் அமைந்துள்ள பலநோக்கு பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.


மகளீர் அபிவிருத்தி நிலைய மாணவர்களினால் உருவாக்கப்பட்ட கைவினைப்பொருட்கள், ஆடைகள் உட்பட பல்வேறு விதமான பொருட்கள் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதுடன், இக்கண்காட்சியினை கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் இ.சசீலனால் சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

குpராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ந.ரஜீஸ் தலைமயில் இடம்பெற்ற இக்கண்காட்சியில் கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் இ.சசீலன், வவுனியா உதவி பிரதேச செயலாளர் ச.பிரியதர்சினி, மற்றும் அரச அதிகாரிகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.











No comments