பண்டிகை காலத்தில் நாடு முடக்கப்படுமா?
எதிர்வரும் பண்டிகை காலத்தில் நாடு முடக்கப்படுமா என்பது தொடர்பில் தற்போதைக்கு கூற முடியாது என வைரஸ் தொடர்பிலான விசேட வைத்திய நிபுணர் ஜுட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாளுக்கு நாள், கிழமைக்கு கிழமை மற்றும் மாதாந்தம் காணப்படுகின்ற நிலைமை குறித்து ஆராய்ந்தே, எதிர்காலத்தில் தீர்மானங்கள் எட்டப்படும் என அவர் கூறுகின்றார்.
இந்நிலையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பண்டிகை காலம் என்பதனால், தற்போதிருந்தே மிக அவதானமாக செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிடுகின்றார்.
பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நாடு முடக்கப்படுமா என்பது தொடர்பில், தம்மால் தற்போதே கூற முடியாது. வைரஸின் செயற்பாடுகள் குறித்து தாம் ஆலோசனைகளை வழங்குகின்ற போதிலும்இ எதிர்காலம் தொடர்பில் தம்மால் கூற முடியாது எனவும் விசேட வைத்திய நிபுணர் ஜுட் ஜயமஹ தெரிவிக்கின்றார். (Vavuniyan)
No comments