Breaking News

அரச ஊழியர்களுக்காக வெளியிடப்பட்ட மற்றுமொரு வர்த்தமானி


அரச ஊழியர்களின் ஓய்வூதியம் பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனின் கையொப்பத்துடன் குறித்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

2022ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில், அரச ஊழியர்களின் ஓய்வூதிய வயதை 65 ஆக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இதன்படி, இந்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வூதிய வயதை 65 ஆக அதிகரித்து, குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. (Vavuniyan) 

No comments