Breaking News

ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது “பேய் குரங்கு” (Photo)


ஆசியாவின் மீகாங் பகுதியில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட 224 உயிரினங்களின் பட்டியலை உலக வனவிலங்கு நிதியம் வெளியிட்டுள்ளது.

கம்போடியா, லாவோஸ், மியன்மார், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய மீகாங் ஆற்றுப்படுகையில் கண்களைச் சுற்றி வெள்ளை வட்டம் கொண்ட பேய் குரங்கு, தவளைகள், முதலை மற்றும் புதிய மூங்கில் இனங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மீகாங் பகுதியில் இவற்றின் வாழிடங்கள் அழிப்ப மற்றும்  மனிதர்களால் உண்டாக்கப்படும் நோய்கள் போன்ற காரணிகளால் பெரும்பாலான உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இங்கு காணப்படும் அதிகமான உயிரினங்கள் அடையாளம் காணப்படுவதற்கு முன்பே அழிவை எதிர் கொள்வதாகவும் அது குறிப்பிட்டது.(Vavuniyan)



No comments