Breaking News

இலங்கையில் மற்றுமொரு துறைமுக நகர் (PORT CITY)


கொழும்பு துறைமுக நகருக்கு ஒத்ததான மற்றுமொரு துறைமுக நகரை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவிக்கின்றார்.

காலி துறைமுகத்தை அபிவிருத்தி செய்து, சுற்றுலா துறைமுகமாக மாற்றும் திட்டத்திற்கான முதலீட்டாளர்களை அழைக்கும் வகையிலான மாநாடு நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த மாநாட்டின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

காலி துறைமுகத்தை அண்மித்த கடல் பரப்பில், 40 ஹெக்டயார் நிலப்பரப்பொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளது. காலி துறைமுகத்தில் அமைக்கப்படவுள்ள இந்த புதிய பூமியில், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், தொடர்மாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

காலி துறைமுகத்தை அண்மித்த கடல் பரப்பில், 40 ஹெக்டயார் நிலப்பரப்பொன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

காலி துறைமுகத்தில் அமைக்கப்படவுள்ள இந்த புதிய பூமியில், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், தொடர்மாடி குடியிருப்புக்களை நிர்மாணிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.(Vavuniyan)

No comments