Breaking News

நாடு முடக்கப்படுமா? – இன்று (05) வெளியான தகவல்


நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கு மத்தியில், நாட்டை முடக்குவதற்கோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ தயார் கிடையாது என்று இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவிக்கின்றார்.

நாட்டில் தற்போது நிலவிவருகின்ற கொவிட் 19 நிலைமைகள் தொடர்பாக, எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கு மத்தியில், கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான தேவை கிடையாது என அவர் கூறுகின்றார்.

எனினும், சுகாதார வழிகாட்டிகளை பின்பற்றுதல் மற்றும் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதன் ஊடாகவே கொவிட் – 19 சவாலை வெற்றிக் கொள்ள முடியும் என ஷன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார். (Vavuniyan) 

No comments