Breaking News

போத்தலை திரும்ப வழங்கினால் 10 ரூபாயை பெறலாம்! வர்த்தக அமைச்சர் வெளியிட்ட அறிவித்தல்


சுற்றாடலுக்கு உகந்த பிளாஸ்டிக் குடி நீர் போத்தல் தயாரிக்கும் திட்டம் ஒன்றை சதோச ஊடாக செயற்படுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில், சதோச குடி நீர் போத்தலை கொள்வனவு செய்து பயன்படுத்தி முடிந்த பின்னர், அதனை மீண்டும் சதோசவிடம் வழங்கி, 10 ரூபாய் நுகர்வோருக்கு வழங்கப்படும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார். 

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கு செய்தியாளர் சந்திப்பில் அவர் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில், குடி நீர் போத்தல்களை , அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள், அரச திணைக்களம் கொள்வனவு செய்யும் போது, அரசாங்கத்தின் செலவை குறைக்கும் திட்டமும் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், இந்த குடி நீர் போத்தல் ஒன்று எஸ்.எல்.எஸ் சின்னத்துடன் 35 ரூபாய் சில்லறை விலையில் விற்பனை செய்யப்படும். மொத்தமாக கொள்வனவு செய்யும் போது, 17.22 வீதம் தள்ளுபடி விலை வழங்கப்படும். அப்போது குடி நீர் போத்தலின் விலை 9 ரூபாய். போத்தலை திரும்ப வழங்கும் போது 10 ரூபாய் வழங்கப்படும். ஒரு குடி நீர் போத்தலுக்காக அரசாங்கம் 19 ரூபாயை செலவிட வேண்டும்.

இதனால், சுற்றாடலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கவும் பிளாஸ்டிக் போத்தல்களை சுற்றாடலுக்கு வீசுவதன் மூலம் ஏற்படும் சுற்றாடல் பாதிப்பை தவிர்க்கவும் சதோசவின் குடிநீர் போத்தல்களை கொள்வனவு செய்யுமாறு அனைத்து அரச நிறுவனங்களிடம் தயவுடன் கோரிக்கை விடுப்பதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். (Vavuniyan)

No comments