இலங்கையில் தொற்று 12%, மரணம் 17% அதிகரிப்பு
இதேவேளை, ஒட்சிசன் தேவைப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்துள்ளதாகவும் அந்த எண்ணிக்கை தற்போது 12 வீதமாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அன்றாடம் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ள அவர், அந்த எண்ணிக்கை 17 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நாள்தோறும் கொரோனா வைரஸ் தொற்று கரணமாக மரணிப்போரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர்களில் 60 வீதமானோர் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளாதவர்களென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசிகளை முறையாகப் பெற்றுக்கொள்வது தொடர்பாக மக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.(Vavuniyan)
No comments