இன்று (21) மின் விநியோக துண்டிப்பு – நேர விபரம் வெளியானது!
நாட்டில் இன்றையதினம் (21) மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.
போதிய மின்சார உற்பத்தி இல்லாததால் மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த அனுமதியினை தாம் வழங்கியதாக ஆணைக்குழு கூறுகின்றது.
இதன்படி, இன்று (21) காலை 8.30 மணி முதல் மாலை 7.30 மணி வரையான காலப் பகுதிக்குள் ஒரு மணிநேர சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படும் என்பதுடன், தென் மாகாணத்தில் மாத்திரம் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணி நேர மின் வெட்டு அமுலில் இருக்கும் என்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். (Vavuniyan)
No comments