Breaking News

மின்சாரம் இன்று (22) துண்டிக்கப்படும் நேரம் வெளியானது


நாட்டில் இன்றைய தினமும் மின்சாரம் துண்டிக்கப்படும் என்று இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருள் இல்லாமை காரணமாகவே, மின்சாரம் துண்டிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

இதன்படி, 2 தொடக்கம் 3 மணித்தியாலங்கள் மின்சாரத்தை துண்டிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இன்று மாலை 4:30 மணி முதல் இரவு 10:30 மணி வரையான காலப் பகுதிக்குள் இந்த மின்சார துண்டிப்பு மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிடுகின்றார். (Vavuniyan) 

No comments