Breaking News

இரு பேருந்துகள் மோதி பாரிய விபத்து! 23 பேர் படுகாயம்


ஹொரணை – கொழும்பு பிரதான வீதியில் இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 23 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து,

ஹொரணையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின், பின்புறம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இவ்விபத்தில் படுகாயமடைந்த இருவர் களுபோவில போதனா வைத்தியசாலையிலும் ஏனைய 21 பேரும் வேதர வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த யாருக்கும்

காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், ஆடை தொழிற்சாலை பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan) 


No comments