வவுனியாவில் கா.பொ.த உயர்தர பரீட்சைக்கு 2661 மாணவர்கள் தோற்றல்
க.பொ.த. உயர்தரப்பரீட்சை நாடுமுழுவதும் இன்று காலை 9.00 மணிக்கு ஆரம்பமாகியது.
அந்தவகையில் இம்முறை வவுனியா மாவட்டத்தில் பரீ்ட்சைக்கான அனைத்து தயார்படுத்தல்களும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 2661 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.
அதற்காக 22 பரீட்சை மத்திய நிலையங்களும், 9
இணைப்புக்காரியாலங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாடாளாவிய ரீதியில் உயர்தரப் பரீட்சைக்காக சுமார் 2இலட்சத்து 79ஆயிரத்து 141 பாடசாலை பரீட்சார்த்திகளும் 66101 தனியார் பரீட்சார்த்திகளும் தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments