இலங்கை தொடரில் தோல்வி - 3-0 என்ற கணக்கில் இந்திய வெற்றி
இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான இறுதி இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
இலங்கை அணி சார்பாக அணித் தலைவர் தசுன் ஷானக்க 38 பந்துகளுக்கு முகம் கொடுத்து, 74 ஓட்டங்களையும், தினேஷ் சந்திமால் 22 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இதன்படி, 147 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 16.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 148 ஓட்டங்களை பெற்று, வெற்றிபெற்று தொடரை முழுமையாக கைப்பற்றியது. (Vavuniyan)
No comments