பைசர் தடுப்பூசி ஏற்றிக்கொண்ட 5 மாணவிகளுக்கு ஏற்பட்ட நிலை
பொகவந்தலாவை சென்.மேரிஸ் மத்திய கல்லூரியில் பைசர் தடுப்பூசி ஏற்றிகொண்ட 5 மாணவிகள் மயக்கமடைந்த நிலையில், பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி இதனை தெரிவித்தார்.
இச்சம்பவம் இன்று (02) புதன்கிழமை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பொகவந்தலாவை சென்.மேரீஸ் மத்திய கல்லூரி மற்றும் ஹொலி ரோசரி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றுவருகின்ற 12 வயது தொடக்கம் 16வயது வரையான மாணவர்களுக்கு இன்று காலை முதல் பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டது.
2000 ம் மாணவர்களுக்கு பைசர் தடுப்பு ஊசி ஏற்றப்பட்டது. இதன் போதே 05 மாணவிகள் மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.(Vavuniyan)
No comments