ஒரு முட்டையின் விலை 50 ரூபாய்?
கால்நடை தீவன விலை உயர்வினாலேயே குறித்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன், சோயா, மக்காச்சோளம் ஆகியவற்றின் விலை உயர்ந்து, கால்நடை தீவன மூட்டை 3 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாட்டில் தினசரி நுகர்வு செய்யப்படும் 80 இலட்சம் முட்டைகளில் கிட்டத்தட்ட 65 இலட்சம் வடமேல் மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுவதுடன், அந்த மாகாணத்தில் சுமார் 4 இலட்சம் விவசாயிகள் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், ஒரு முட்டையின் உற்பத்திச் செலவுடன் ஒப்பிடும்போது, தற்போதைய சந்தை விலையில் முட்டையை விற்க முடியாமல் சுமார் 20வீத உற்பத்தியாளர்கள் இத்தொழிலை விட்டு வெளியேறியுள்ளதாக மேலும் தெரிவித்திருந்ததுடன்.
இப்பிரச்சினையில் அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், முட்டை விலை ரூ.50 ஆக உயர்வதை தொழில் துறையினர் தடுக்க முடியாது என்று எச்சரித்திருந்தார். (Vavuniyan)
No comments