வவுனியாவில் ஸ்கானர் இயந்திரத்துடன் 5 பேர் கைது!!
வவுனியா நகரப்பகுதியில் நிலத்தை கண்காணிக்கப்பயன்படும் ஸ்கானர் இயந்திரத்தினை உடமையில் வைத்திருந்த 5பேர் கைது செய்யப்பட்டனர்.
வவுனியா மடுகந்தை விசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வவுனியா மரக்கறிச்சந்தை பகுதியில் வைத்து கப் வாகனம் ஒன்று சோதனையிடப்பட்டது.
இதன்போது குறித்த வாகனத்தில் நிலத்தை ஆய்வு செய்வதற்கு பயன்படும் ஸ்கானர் இயந்திரம் ஒன்று
கொண்டு செல்லப்படுகின்றமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து வாகனத்தில் பயணித்தவர்களை கைது செய்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை வவுனியா பொலிசில் ஒப்படைத்தனர்.
கைது செய்யபட்டவர்கள் பியகமவை சேர்ந்த 4 பேரும், பிலியந்தலவை சேர்ந்த ஒருவருமாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிசார் தெரிவித்ததுடன் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.(Vavuniyan)
No comments