A/L பரீட்சை இன்று (07) ஆரம்பம்
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை இன்றையதினம் (07) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் L.M.னD. தர்மசேன தெரிவிக்கின்றார்.
இம்முறை உயர்தர பரீட்சை இன்று (07) முதல் எதிர்வரும் மார்ச் மாதம் 05ம் திகதி வரை நடைபெறவுள்ளது. உயர்தர பரீட்சைக்கு தோற்றும் கொவிட் 19 தொற்றுக்குள்ளான மாணவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்களுக்காக வைத்தியசாலைகளுக்கு அருகாமையிலேயே 29 மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்முறை 2,437 மத்திய நிலையங்களில் 279,141 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். இதேவேளைஇ இம்முறை பரீட்சை நடைபெறும் பரீட்சை மத்திய நிலையங்களில் இலத்திரனியல் சுவர் கடிகாரத்தை காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(Vavuniyan)
No comments