Breaking News

A/L வகுப்பிற்கு தெரிவாகவில்லையா? – அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியானது


2020ம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெறாது, உயர்தரத்திற்கு தகுதி பெறாத மாணவர்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

2020ம் ஆண்டு கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியவர்களில், 98000 மாணவர்கள் உயர்தரத்திற்கு பிரவேசிக்க தகுதி பெறவில்லை என கணிப்பிடப்பட்டுள்ளது

கணித பாடத்தில் தகுதி பெறாது, கணித பாடத்தில் சித்தியை பெற்றுத் தருவதாக கூறி, உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களை தவிர, ஏனைய அனைத்து மாணவர்களையும் இலக்காகக் கொண்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.

உயர்தரத்திற்கு தகுதி பெறாத மாணவர்கள், பிரதேச செயலக மட்டத்தில் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் தகுதி, திறமைகளுக்கு அமைய அவர்களுக்கான தொழில் பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் இரண்டு கட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.(Vavuniyan) 

No comments