Breaking News

சிறைக்குள் பரீட்சை எழுதும் கைதிகள் – ஒரு விடுதலை புலி சந்தேகநபரும் பரீட்சை எழுதுகின்றார்


வெலிகடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள மூன்று சிறை கைதிகள், இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.

இதன்படி, 2 சிறை கைதிகளும், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் கைதான ஒருவருமே இவ்வாறு உயர்தர பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

43 மற்றும் 46 வயதான கைதிகளும், 38 வயதான சந்தேகநபர் ஒருவருமே இவ்வாறு பரீட்சை எழுதி வருகின்றனர்.

புதிய மெகஸின் சிறைச்சாலையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள விசேட பரீட்சை மத்திய நிலையத்தில் இந்த பரீட்சைகள் நடைபெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.(Vavuniyan) 

No comments