கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!
குருவிட்டை - பொரலுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீடொன்றிற்குள் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இவ்வாறு கொலைச் சம்பவத்தில் முடிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது 49 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீட்டிற்குள்ளிருந்து எரிந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் தெரணியகல பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.(Vavuniyan)
No comments