வவுனியாவில் வீரசிங்கம் பிரதீபனின் ஆடற்கதை நூல் வெளியீடு!!
வவுனிய நெடுங்கேணி பிரதேசகலாசார உத்தியோகத்தர் தமிழ்வாரிதி வீரசிங்கம் பிரதீபன் எழுதிய “ஆடற்கதை” நாட்டிய நாடக நூல் அறிமுகவிழா வவுனியா கந்தசுவாமி கோவில் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
நிருத்தியவாணி திருமதி சூரியயாழினி வீரசிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முதன்மை விருந்தினராக வவுனியா பிரதேசசெயலாளர் நா.கமலதாசன் கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினராக வைத்தியகலாநிதி க.இராகுலனும், விசேட விருந்தினராக, வவுனியா கந்தசுவாமி கோவில் பொருளாளர் ந.எ.அருட்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நூலினை பிரதேசசெயலாளர் நா.கமலதாசன் வெளியிட்டுவைக்க அதன் முதற்பிரதியை வைத்தியர் ராகுலன் பெற்றுக்கொண்டார்.
நூலிற்காக அறிமுகஉரையை கலாபூஷணம் தமிழ்மணி மேழிக்குமரன் ஆற்றினார். வவுனியா தேசிய கல்வியியல் கல்லூரியின் நடனத்துறை சிரேஷ்ட விரிவு ரையாளர் திருமதி கிருபாஹரி யோகராஜா நூல் நயவுரையாற்றினார்.
இந்நிகழ்வில் நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரி மாணவிகள் வழங்கிய மண்டோதரி கல்யாணம் நாட்டிய நாடகமும் அரங்கேற்றப்பட்டது.(Vavuniyan)
No comments