ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவன் உயிரிழப்பு
மொரோக்கோவில் கடந்த 4 தினங்களாக ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்திருந்த சிறுவன், உயிரிழந்துள்ளான்.
சுமார் 100 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றில் ராயன் அவரம் என்ற 5 வயது சிறுவன் வீழ்ந்துள்ளான்.
இந்நிலையில், குறித்த பகுதிக்கு விரைந்த மீட்பு குழுவினர், பல இயந்திரங்களின் உதவியுடன் சிறுவனை மீட்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர்.
ஆழ்துளை கிணற்றிற்குள் இருந்த சிறுவனுக்கு குழாய் மூலம், நீர் மற்றும் ஒக்சிஜன் ஆகியன வழங்கப்பட்டுள்ளன.
”என்னை தூக்குங்கள்” என சிறுவன் வீழ்ந்த உடனேயே அழுந்துள்ளான்.
இந்த நிலையில், கையடக்கத் தொலைபேசி கமராவின் மூலம் சிறுவன், ஆழ்துளை கிணற்றிற்குள் இருக்கும் இடம் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பாறைகள் மற்றும் மண்சரிவு ஏற்படும் அபாயம் நிலவி வந்த போதிலும், சிறுவனை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வாறான பாரிய பிரயத்தனத்திற்கு மத்தியில், சிறுவனின் உடலை மாத்திரமே, மீட்புப் பணியாளர்கள் மீட்டுள்ளனர்.(Vavuniyan)
No comments