அரசிலிருந்து விலகத் தயார் -மைத்திரி தரப்பு அதிரடி அறிவிப்பு
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் அனுமதியுடன் எந்த நேரத்திலும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறத் தயார் என்று அக்கட்சியின் செயலாளர் நாயகமும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, கிராம அளவில் கட்சி வலுவான வேலைத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்றார்.
தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மிகக் குறைந்த அளவே திட்டங்களை வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலனறுவை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Vavuniyan)
No comments