Breaking News

வவுனியாவிற்கு விஜயம் செய்யும் அரசதலைவர்!!

வவுனியா பல்கலைகழகத்தின் தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச இன்றையதினம் வவுனியாவிற்கு வருகைதருகின்றார்.

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம்  தனியான பல்கலைக்கழகமாக கடந்த வருடம் அதிவிசேட வர்த்தமானி மூலம் பிரகடணப்படுத்தப்பட்டது. 

1991 ஆம் ஆண்டு வடமாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்ட இந்த கல்லூரி 1997ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது. 30 வருடங்களின் பின்னர் இந்த வளாகம் ஒரு தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டது. 

வியாபார கற்கைகள், பிரயோக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் கற்கைகள் எனும் மூன்று கற்கை நெறிகளின் கீழ் உயர் கல்வியை வழங்குவதற்காக இந்த பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமான வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கலாநிதி ரி.மங்களேஸ்வரன் நியமிக்கப்பட்டிருந்தார்.

இதனை ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ தலைமையில் கடந்தவருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்தது.
எனினும் கொரோனா நிலமை காரணமாக அது பிற்றபோடப்பட்டது.

இந்நிலையில் குறித்த உத்தியோகபூர்வ ஆரம்பவிழா நிகழ்வு பம்பைமடுவில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் இன்றையதினம் காலை10.30மணிக்கு இடம்பெறவுள்ளது. அதில் அரசதலைவர் கோட்டாபய ராஜபக்ச கலந்துகொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைக்கின்றார். (Vavuniyan) 

No comments