கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியின் அநாகரிக செயற்பாடு - சிறிதரன் எம்.பி எடுத்த நடவடிக்கை
கிளிநொச்சி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றும் மருத்துவர் பிரியாந்தினி கமலசிங்கம் தன்னுடைய பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தனவுக்கு முறையிட்டுள்ளார்.
அவருடன் தான் தொலைபேசி மூலம் கதைத்த விடயங்களை பதிவு செய்து அதனை சமுக ஊடகங்களில்; வெளியிட்டுள்ளார், எனவும் எனவே இவ்வாறான அவரின் செயற்பாடு தனது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டுள்ளதாகவும் சிறிதரன் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அவருக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தொடர்பில் மிகவும் நாகரிகமான முறையில் அவருடன் தொலைபேசியில் பேசியதாகவும் ஆனால் தனது அனுமதி எதுவுமின்றி குறித்த தொலைபேசி உரையாடலை அவர் சமுக ஊடகங்களில் வெளியிட்டுள்ளதாகவும் சிறிதரன் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். (Vavuniyan)
No comments