ஊடக சுதந்திரத்தை அடக்கும் செயற்பாட்டில் முற்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர்
நேற்று முன்தினம் வவுனியா குடியிருப்பு சிறுவர் பூங்காவிற்குள் மதுபோதையில் உள்நுளைந்த ரவுடிகள் அங்கிருந்த முதியவர் ஒருவரை கடுமையாக தாக்கியதுடன், அதனை தட்டிக்கேட்க வந்த குடும்பஸ்தரையும் தாக்கி அவரது பெறுமதிமிக்க தொலைபேசியினையும் உடைத்து சுக்குநூறாக்கினர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்களால் வவுனியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த ரவுடிகள் வருகைதந்ததாக தெரிவிக்கப்படும் முற்சக்கரவண்டி வவுனியா மாவட்ட முற்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், சங்கத்தலைவரின் உறவுமுறையான நபரே இந்த தாக்குதல் சம்பவத்தினை முன்னெடுத்திருந்ததாக பின்னர் தெரியவந்தது.
இதனையடுத்து இது தொடர்பான செய்தியினை வவுனியா மாவட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஒருவர் வெளிக்கொண்டு வந்ததுடன், குறித்த முச்சக்கரவண்டி தொடர்பாக தெளிவுபடுத்தல் ஒன்றையும் முகநூலில் பதிவுசெய்திருந்தார்.
இதனை பொறுத்துக்கொள்ள முடியாத வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குறித்த ஊடகவியலாளரை அச்சுறுத்தும் விதமாக முகநூலில் கருத்தொன்றினை பதிவுசெய்துள்ளார். அவரது முகநூல் பதிவு ஊடக சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக பலரும் விசனம் தெரிவிக்கின்றனர்.(Vavuniyan)
No comments