கடுந்தொனியில் மீனவர்களை எச்சரித்து ஆத்திரமாக வெளியேறிய அமைச்சர் டக்ளஸ் விளக்கம் (வீடியோ)
கடற் தொழிலாளர்களுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் நடத்தப்பட்ட சந்திப்பு குழப்பத்தில் முடிந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய இழுவைப் படகுகள் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைய கூடாது என்றும், உயிரிழந்து கடற் தொழிலாளர்களுக்கு நீதிகோரியும் சுப்பர்மடம் பகுதியில் கடற் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், போராட்ட களத்திற்கு சென்றிருந்த டக்ளஸ் கடற்தொழிலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். எனினும், இதன்போது ஏற்பட்ட குழப்பத்தையடுத்து அமைச்சர் அங்கிருந்து வெளியேறிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இப்போராட்ட களத்திற்கு அமைச்சர் சென்ற போது எஸ்ரிஎப் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் சென்றதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
Post Comment
No comments