வவுனியாவில் “மூதன்னையின்பாடல்” நூல் வெளியீடு!!
சி.கிருக்ஷ்ணபிரியனின் “மூதன்னையின்பாடல்” கவிதை நூல் வெளியீட்டு விழா நிகழ்வு வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசியகலை இலக்கியபேரவை அரங்கில் இன்று இடம்பெற்றது.
வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் ஓய்வுநிலை உபபீடாதிபதி ந.பார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை முகத்தான்குளம் விக்கினேஸ்வரா வித்தியாலய அதிபர் கி.செல்வராஜா நிகழ்த்த, நூலிற்கான விமர்சன உரையை ஆசிரிய ஆலோசகர் கவிஎழில் த.நிறைமதி நிகழ்த்தினார்.
கருத்துரையை நிரூஜா கார்த்தீபனும், நன்றி உரையினை தேசியகலை இலக்கியப் பேரவையின் சு.டொன்பொஸ்கோவும் நிகழ்த்தினர்.
நிகழ்வில் நூலின் பிரதிகள் விருந்தினர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், கவிதை வாசிப்பும் இடம்பெற்றது. (Vavuniyan)
No comments