வவுனியா சிறைச்சாலையில் இருந்தும் ஒருவர் விடுவிப்பு!!
சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து கைதி ஒருவர் விடுதலை செய்யப்பட்டார்.
நாட்டின் 74 வது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்டுவருகின்ற நிலையில் நாடாளாவிய ரீதியில் அமைந்துள்ள சிறைச்சாலைகளில் இருந்து 197 கைதிகள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்தவகையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறுகுற்றம் ஒன்றைபுரிந்த நிலையில் தண்டப்பணத்தினை செலுத்தமுடியாமல் தடுத்துவைக்கப்பட்டிருந்த 43 வயதான நபர் ஒருவர் இன்று காலை விடுவிக்கப்பட்டார்.
குறித்த நிகழ்வில் சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகள் கலந்துகொண்டனர்(Vavuniyan)
No comments