Breaking News

நடு வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கிப் படுகொலை!


கம்பஹாவில்  முதியவர் ஒருவரை  கூரிய ஆயுதத்தால் தாக்கி  கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கம்பஹா காவல்துறை பிரிவுக்குட்பட்ட லக்ஷ்மி வீதி பகுதியில் உந்துருளியில் பயணித்த இருவரினால் மேற்கொள்ளப்பட்ட கத்திக்குத்து தாக்குதலிலேயே  உயிரிழந்துள்ளார்.

குறித்த  கொலைச் சம்பவம் தொடர்பில் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 35 மற்றும் 32 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்று கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 கம்பஹா லக்ஷ்மி வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய நபரே இத்தாக்குதல் சம்பவத்தில் மரணமானார் என  என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை கம்பஹா பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. (Vavuniyan)

No comments