Breaking News

ஜனாதிபதி நேற்றிரவு அதிரடியாக வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பு


ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய, சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸிலி ரத்நாயக்க தெரிவிக்கின்றார்.

2022.02.11ம் திகதியிடப்பட்ட 2266/55 இலக்க அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி, மின்சார விநியோகம், வைத்தியசாலை, நேர்சிங் ஹோம்கள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் இதனுடன் ஒத்ததான நோயாளர் பராமரிப்பு சேவைகள், வரவேற்பு, உபசரிப்பு மற்றும் சிகிச்சை ஆகியவை தொடர்பிலான அனைத்து அவசியமான சேவைகள் மற்றும் தொழில்கள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. (Vavuniyan) 

No comments