Breaking News

வவுனியா காமினி மாகாவித்தியாலயத்தில் நடமாடும் சேவை


வட மாகாண ஆளுனரின் திட்டமிடலுக்கு அமைய வடமாகாண நடமாடும் சேவை ஒன்று வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களுக்காக இடம்பெற்றது.

வவுனியா காமினி மாகா வித்தியாலயத்தில் குறித்த நடமாடும் சேவை இன்று (24.02) இடம்பெற்றது.

இதில் வட மாகாணத்திற்கு உட்பட்ட  திணைக்களுங்கள், அமைச்சுக்கள் குறித்த நடமாடும் சேவையில் பங்கேற்றன.

வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராசாவின் வழிப்படுத்தலில் நடைபெற்ற இவ் நடமாடும் சேவையில் வவுனியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்கள் பலரும் கலந்து கொண்டு நீண்டகாலமாக தீர்க்கப்படாது இருந்த பல பிரச்சனைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுக் கொண்டனர்.

இதன்போது வடமாகாண பிரதம செயலாளர் சமன்பந்துலசேன, வடமாகாண அமைச்சுக்களின் உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், அரச அதிகாரிகள், பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். (Vavuniyan)






No comments