கொழும்பு முழுவதும் மின்வெட்டு
கொழும்பு 01 – 15 வரையான பகுதிகளில் இன்று (24) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலப்பகுதி தொடர்பில் இதுவரை தீர்மானிக்கப்படவில்லையென்று இலங்கை மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ரூ நவமணி தெரிவித்தார்.
இதுதவிர்த்து நாட்டின் சில பகுதிகளில் A, B மற்றும் C பிரிவுகளில் இன்று (24) 4 மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஏனைய பகுதிகளில் நான்கரை மணித்தியால மின்வெட்டினை அமுல்படுத்த ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. (Vavuniyan)
No comments